/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
த.வெ.க., ஆர்ப்பாட்டம்: 50 பேர் மீது வழக்கு
/
த.வெ.க., ஆர்ப்பாட்டம்: 50 பேர் மீது வழக்கு
ADDED : நவ 03, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்ககிரி, நவ. 3-
சங்ககிரி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, த.வெ.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. சேலம் மாவட்ட துணை செயலர் ஆதிகேசவன் தலைமை வகித்தார். அதில் கட்சியின் சேலம் மாநகர நிர்வாகி சஞ்சயை தாக்கிய கிச்சிப்பாளையம் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷம் எழுப்பினர்.
இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்களை, சங்ககிரி போலீசார் கைது செய்து பின் விடுவித்தனர். இருப்பினும் ஆதிகேசவன் உள்பட, 50க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.