ADDED : நவ 18, 2024 03:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
த.வெ.க.,வின் வீரபாண்டி மேற்கு ஒன்றியம் சார்பில் புது வாக்-காளர் பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. நடிகர் விஜய், நிர்வாகிகள் படம் இடம்பெற்றுள்ளன.
அதில், 'உங்களுக்கு 18 வயது ஆகிவிட்டதா, நவ., 16, 17 மற்றும் 23, 24ல், உங்கள் பகுதி ஓட்டுச்சவாடிகளுக்கு, ஏதேனும் அடையாள அட்டையுடன், முகாம் சென்று வாக்காளராக பதிவு செய்து கொள்ளலாம்' என தெரிவித்துள்ளனர். புது கட்சி என்-பதால் பூத் ஏஜன்டுகள் நியமிக்கப்படவில்லை. இருப்பினும் இளம் வாக்காளர்களை கவர இதுபோன்று போஸ்டர்கள் ஒட்டிய-தாக, அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.