/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தலைமறைவாக இருந்த 2 பேர் சுற்றிவளைப்பு
/
தலைமறைவாக இருந்த 2 பேர் சுற்றிவளைப்பு
ADDED : ஆக 10, 2025 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், செவ்வாய்ப்பேட்டை கறிமார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் சண்முகம், 30. இவர், 2019ல், அன்னதானப்பட்டி போலீசாரால், வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார். பின் விசாரணைக்கு ஆஜராகாததால், நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. தலைமறைவாக இருந்த சண்முகம்,
நேற்று அவரது வீட்டுக்கு வந்த நிலையில், அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர். அதேபோல் குகை, பஞ்சந்தாங்கி ஏரி பகுதியை சேர்ந்த கார்த்தி, 29, திருட்டு வழக்கில், நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்த நிலையில் செவ்வாய்ப்பேட்டை போலீசார், அவரது வீடு அருகே, கார்த்தியை கைது செய்தனர்.

