ADDED : ஜன 23, 2026 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மூணாங்கரடு பகுதியில், கஞ்சா விற்பனை செய்வதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைய-டுத்து, அப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார், சந்தேகப்படும்-படி சுற்றித்திரிந்த இருவரிடம் விசாரணை நடத்தினர்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், எஸ்.ஆர்.எம். தோட்-டத்தை சேர்ந்த ராஜா, 32, லைன்மேட்டை சேர்ந்த அப்துல் ரகீம், 29, என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, சேலத்தில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதைய-டுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து, ௧ கிலோ, 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

