ADDED : ஜூலை 09, 2024 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்ககிரி : சங்ககிரி சுற்றுவட்டார பகுதிகளில், சில வாரங்களுக்கு முன்பு பல்வேறு மோட்டார் பைக்குகள் திருடப்பட்டு வந்தது.
இதையடுத்து, சங்ககிரி டி.எஸ்.பி., ராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரித்து வந்தனர்.இந்நிலையில் தனிப் படையினர் சேலம், செட்டிக்காடு, கோரிமேடு, சத்யாநகர் பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் ராஜ்குமார், 32, தீவட்டிபட்டி, சந்தைபேட்டையை சேர்ந்த கோவிந்தன் மகன் குமார், 42, ஆகியோரை கைது செய்து, ஒரு மோட்டார் பைக்கை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.