/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மொபட்-பைக் மோதிய விபத்தில் இருவர் பலி
/
மொபட்-பைக் மோதிய விபத்தில் இருவர் பலி
ADDED : ஜூலை 08, 2025 01:43 AM
பெத்தநாயக்கன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே, பைக்-மொபட் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்துார் அடுத்த ஊத்து மடு பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் மகன் சேரன், 25, தனியார் கம்பெனி மெக்கானிக். இவர் நேற்று இரவு, 7:00 மணிக்கு சேலத்தில் இருந்து, பல்சர் பைக்கில் கொத்தாம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். பெத்தநாயக்கன்பாளையம், 8 வது வார்டு காந்திநகர் அருகே, சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பெத்த நாயக்கன்பாளையம் அடுத்த மணக்காட்டை சேர்ந்த தொழிலாளி ராஜேந்திரன், 55, சர்வீஸ் சாலையில், எதிர்திசையில் டி.வி.எஸ்.
எக்ஸ்.எல்., மொபட்டில் வந்துள்ளார். அப்போது, இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதின. இதில் இருவரும் துாக்கி வீசப்பட்டனர். அப்பகுதியினர் மீட்டு, பெத்தநாயக்கன்பாளையம் அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இருவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். ஏத்தாப்பூர் போலீசார், இருவரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரிக்கின்றனர்.