/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓட்டலில் பொருட்கள் திருடிய 2 பேருக்கு 'காப்பு'
/
ஓட்டலில் பொருட்கள் திருடிய 2 பேருக்கு 'காப்பு'
ADDED : ஏப் 19, 2025 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி:
கெங்கவல்லி, தெடாவூரை சேர்ந்தவர் மாவீரன், 36. கெங்கவல்லி, 4 ரோட்டில் கீற்றுக்கொட்டகையில் பிரியாணி ஓட்டல் நடத்துகிறார். அங்கு கடந்த, 14 இரவில் புகுந்த மர்ம நபர்கள், காஸ் சிலிண்டர், அடுப்பு, சமையல் பாத்திரங்களை திருடிச்சென்றனர்.
இதுகுறித்து மாவீரன் புகாரில், கெங்கவல்லி போலீசார் விசாரித்து கெங்கவல்லி, மீனவர் தெருவை சேர்ந்த சுரேஷ், 44, சுபாஷ், 41, ஆகியோரை, நேற்று கைது செய்தனர். இவர்கள், மஞ்சினியைச் சேர்ந்த மூர்த்தியின் மொபட், தெடாவூர் வி.ஏ.ஓ., வேல்முருகனின் பைக்கை திருடியதும் தெரியவந்தது.