/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முயல் வேட்டைக்கு முயற்சி 2 பேருக்கு ரூ.50,000 அபராதம்
/
முயல் வேட்டைக்கு முயற்சி 2 பேருக்கு ரூ.50,000 அபராதம்
முயல் வேட்டைக்கு முயற்சி 2 பேருக்கு ரூ.50,000 அபராதம்
முயல் வேட்டைக்கு முயற்சி 2 பேருக்கு ரூ.50,000 அபராதம்
ADDED : ஜூலை 27, 2025 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர், மேட்டூர், பி.என்.பட்டி, புதுக்காட்டை சேர்ந்தவர் அய்யந்துரை, 45. நவப்பட்டி, செக்கானுாரை சேர்ந்தவர் லோகநாதன், 55. இருவரும் நேற்று முன்தினம் அதிகாலை பாலமலை காப்புக்காடு, செக்கானுார் வனப்பகுதியில் முயல் பிடிக்க, கம்பி வலைகள், நெற்றியில் பொருத்தப்பட்ட விளக்குகளுடன் சென்றனர்.
அவர்களை, வனவர் சிவகுமார் உள்ளிட்ட வனத்துறையினர் பிடித்து, கம்பிவலை, விளக்குகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவருக்கும், தலா, 25,000 ரூபாய் அபராதம் விதித்து, சேலம் மாவட்ட வன அலுவலர் காஷ்யப் சஷாங் ரவி உத்தரவிட்டார்.