/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தனியார் பஸ் அதிவேகத்தால் பயணி உள்பட இருவர் பலி
/
தனியார் பஸ் அதிவேகத்தால் பயணி உள்பட இருவர் பலி
ADDED : செப் 24, 2024 07:38 AM
கோபி: கோபி அருகே தனியார் பஸ் மோதியதில், மொபட்டில் பய-ணித்த முதியவரும், பஸ் படிக்கட்டில் பயணித்த வாலிபரும் பலி-யாகினர்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே எரங்காட்டூரை சேர்ந்-தவர் நவீன்குமார், 24; தனியார் நிறுவன ஊழியர். சத்தியமங்க-லத்தில் இருந்து கோபி வழியாக ஈரோடு செல்லும் தனியார் பஸ்சில் நேற்று காலை, 9:15 மணிக்கு பயணித்தார். கூட்டம் அதி-கமாக இருந்ததால் முன்படிக்கட்டில் நின்றபடி பயணித்தார். கோபி, பழைய வள்ளியாம்பாளையம் பிரிவு அருகே புதுவள்ளி-யாம்பாளையத்தை சேர்ந்த சண்முகம், 87,
டி.வி.எஸ்., 50 மொபட்டில் சென்றார். அதிவேகமாக சென்ற பஸ் மொபட் மீது மோதியது. இதனால் டிரைவர் சேகர், 40, திடீர் பிரேக் போடவே, முன்புற படிக்கட்டில் நின்றிருந்த நவீன்குமார் சாலையில் விழுந்-ததில்,
அவர் தலை மீது பஸ் பின்சக்கரம் ஏறியது. இதைப்பார்த்து அப்பகுதி மக்கள் திரண்டனர். பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால்,
வழியிலேயே இருவரும் இறந்து விட்டனர். புகாரின்படி கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.பேரிகார்டு அவசியம்; டி.எஸ்.பி.,விபத்து நடந்த இடத்தில் கோபி டி.எஸ்.பி., சீனிவாசன் ஆய்வு செய்தார். பின் பழைய வள்ளியாம்பாளையம் பிரிவு பகுதியில் பேரிகார்டும், ஆண்டவர் மலை சாலையில், வேகத்தடையும் அமைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து உடனடியாக கோபி-சத்தி சாலை, பழைய வள்ளியாம்பாளையம் பிரிவு பகுதி என இரு இடங்களில், போக்குவரத்து போலீசார் பேரிகார்டு வைத்தனர்.

