/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாய் குறுக்கே வந்ததால் விபத்து பள்ளி மாணவர் உள்பட 2 பேர் பலி
/
நாய் குறுக்கே வந்ததால் விபத்து பள்ளி மாணவர் உள்பட 2 பேர் பலி
நாய் குறுக்கே வந்ததால் விபத்து பள்ளி மாணவர் உள்பட 2 பேர் பலி
நாய் குறுக்கே வந்ததால் விபத்து பள்ளி மாணவர் உள்பட 2 பேர் பலி
ADDED : ஜூலை 28, 2025 03:49 AM
மேட்டூர்: கொளத்துார், கண்ணாமூச்சி ஊராட்சி கொடம்பகாட்டை சேர்ந்த ஆறுமுகம் மகன் பூவரசன், 19. கூலித்தொழிலாளி. இவர்களது குடும்பத்தினர், சாம்பள்ளி ஊராட்சி, அச்சங்காட்டில் குடியிருந்து வேலை செய்து வந்தனர். கருங்கல்லுார், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த அம்மாசி மகன் தனசேகர், 17. அருகிலுள்ள சத்யா நகர் அரசு மேல்நிலைப்பள்ளி
யில், பிளஸ் 1 படித்து வந்தார். இவரும், பூவரசனும் நண்பர்கள்.
நேற்று மதியம், 3:30 மணிக்கு, 'பல்சர்' பைக்கில், ஹெல்மெட் அணியாமல் பூவரசன் ஓட்ட, தனசேகர் அமர்ந்து வந்தார். கொளத்துாரில் இருந்து கண்ணாமூச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். கண்ணாமூச்சி சாலையில் கிட்டான்காடு அருகே சென்றபோது, நாய் குறுக்கே வர, கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர தடுப்புச்சுவரில் மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். கொளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.