ADDED : அக் 09, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்,தலைவாசல், வீரகனுார், களக்கமேட்டை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது தோட்டத்தில், அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி பரஞ்ஜோதி, 60, என்பவர் நேற்று, பூச்சிக் கொல்லி மருந்து அடிக்க சென்றார்.
அப்போது, புளிய மரத்தில் இருந்த கூட்டில் இருந்து, கதண்டு தேனீக்கள், பரஞ்ஜோதியை கொட்டின. அதே பகுதியை சேர்ந்த, மகாலட்சுமி, 35, என்பவரையும் கொட்டியது. 10க்கும் மேற்பட்ட கதண்டுகள் கொட்ட, படுகாயம் அடைந்த இருவரும், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.