/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மரவள்ளி கிழங்கு டன்னுக்கு ரூ.15,000 கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
/
மரவள்ளி கிழங்கு டன்னுக்கு ரூ.15,000 கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மரவள்ளி கிழங்கு டன்னுக்கு ரூ.15,000 கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மரவள்ளி கிழங்கு டன்னுக்கு ரூ.15,000 கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 09, 2025 01:24 AM
சேலம், :மரவள்ளி கிழங்கு டன்னுக்கு, 15,000 ரூபாய் கேட்டு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார்.
அதில் ஐக்கிய விவசாயிகள் சங்க தலைவர் அரங்க சங்கரய்யா பேசுகையில், ''தமிழகத்தில், 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மரவள்ளி சாகுபடி நடப்பதால், அதற்கு உரிய விலை கேட்டு, விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தியும், தமிழக அரசு, இதுவரை செவிசாய்க்கவில்லை,'' என்றார்.
தொடர்ந்து, விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் ராமமூர்த்தி பேசுகையில், ''சேலத்தில், கடந்த செப்., 18ல், அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் முத்தரப்பு கூட்டம் நடந்தது. அதில் குழு அமைத்து, மரவள்ளிக்கு விலை நிர்ணயம் செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை குழு அமைக்கப்படவில்லை. மரவள்ளி டன்னுக்கு, 15,000 ரூபாய், ஜவ்வரிசி மூட்டைக்கு, 4,500, ஸ்டார்ச் மூட்டை, 3,500 ரூபாயாக விலை நிர்ணயிக்க வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து, கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். பின் கோரிக்கை மனு, கலெக்டர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது. பெத்தநாயக்கன்பாளையம் வட்டார தலைவர் ராமசாமி உள்ளிட்ட விவசாயிகள், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட செயலர் அரியாகவுண்டர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.