/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வக்கீல் உள்பட மூவரிடம் ரூ.39 லட்சம் மோசடி ரியல் எஸ்டேட் அதிபர் 2 பேர் கைது
/
வக்கீல் உள்பட மூவரிடம் ரூ.39 லட்சம் மோசடி ரியல் எஸ்டேட் அதிபர் 2 பேர் கைது
வக்கீல் உள்பட மூவரிடம் ரூ.39 லட்சம் மோசடி ரியல் எஸ்டேட் அதிபர் 2 பேர் கைது
வக்கீல் உள்பட மூவரிடம் ரூ.39 லட்சம் மோசடி ரியல் எஸ்டேட் அதிபர் 2 பேர் கைது
ADDED : அக் 02, 2025 01:54 AM
சேலம், சேலம் கிச்சிப்பாளையம், அம்மையப்பன் தெருவை சேர்ந்தவர் நீதிமணி, 43. செங்கல்பட்டு மேடவாக்கம், விமலாநகர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாண்டியன், 37. இவர்கள் இருவரும் சேர்ந்து, சேலம் சாரதா கல்லுாரி சாலை, ஜெயக்குமார் பிளாசாவில், 'வேலோசிட்டி டெவலப்பர்ஸ் அண்ட் பிளாசம் ஆஸிஸ் அண்ட் டெவலப்பர்ஸ்' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகின்றனர்.
சேலம் சூரமங்கலம், ரங்கா நகர், 3வது குறுக்குதெருவை சேர்ந்த சந்திரசேகரன், 63, வக்கீலாக உள்ளார். இவர், ஏற்காட்டில் மினி எஸ்டேட் வாங்க முடிவெடுத்து, நீதிமணியை அணுகி உள்ளார். அதன்படி, அங்குள்ள முளுவி கிராமம் பூலாக்காடு பகுதியில் கிரீன் மவுன்ட் எஸ்டேட்டில் ஒரு பகுதியை வாங்க, முன்பணமாக, 5 லட்ச ரூபாய் கொடுத்து, 2022ல், ஒப்பந்த பத்திரம் எழுதப்பட்டுள்ளது. அதன்பின் வக்கீல், 6 மாதங்களில், பல தவணைகளாக, 23 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார்.
மொத்தமாக, 28 லட்ச ரூபாய் பெற்று கொண்ட நீதிமணி, ஒப்பந்தப்படி, எஸ்டேட்டை கிரயம் செய்து தராமல் போக்குகாட்டி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பணம் தர மறுத்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட வக்கீல், சேலம் மாநகர் குற்ற புலனாய்வு பிரிவில் புகார் அளித்தார். விசாரணையில், வக்கீல் உள்பட மூவரிடம் மொத்தம், 39 லட்ச ரூபாய் மோசடி நடந்திருப்பதும், இதற்கு பாண்டியன் உள்ளிட்ட பங்குதாரர்கள் மூவர் உடந்தையாக இருப்பது தெரிந்தது.
இது தொடர்பாக மோசடி, கூட்டுசதி, கொலை மிரட்டல் என மூன்று பிரிவுகளில் வழக்குபதிந்து நீதிமணி, பாண்டியன் ஆகியோர், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். அவர்களது கூட்டாளிகள் சிவக்குமார், அய்யப்பன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் நீதிமணி மீது, மோசடி வழக்கு நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.