/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குழந்தைகளை மீட்டு தரக்கோரி இருவர் தீக்குளிக்க முயற்சி
/
குழந்தைகளை மீட்டு தரக்கோரி இருவர் தீக்குளிக்க முயற்சி
குழந்தைகளை மீட்டு தரக்கோரி இருவர் தீக்குளிக்க முயற்சி
குழந்தைகளை மீட்டு தரக்கோரி இருவர் தீக்குளிக்க முயற்சி
ADDED : பிப் 13, 2024 12:26 PM
சேலம்: சேலம், உத்தமசோழபுரத்தை சேர்ந்த ராமு என்பவரின் மனைவி ஜெபா, 25. இவரது தாய் மரியா, 50. இவர்கள், நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் முன், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அப்போது ஜெபா கூறியதாவது: எனக்கு ராமுவுடன் திருமணமாகி, ஆறு ஆண்டுகள் ஆகிறது. எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவர் கூலி வேலை செய்கிறார். கடந்த இரு ஆண்டுகளாக, குடும்பத்தை கணவர் சரிவர கவனிப்பது இல்லை. அதுமட்டுமின்றி குடித்துவிட்டு வந்து, தகராறு செய்கிறார். கடந்த மாதம், 18ல் ராமு குடித்து விட்டு வந்து தகராறு செய்த பின், இரு குழந்தைகளையும் கடத்தி சென்றுள்ளார். இது குறித்து, கொண்டலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
பின் அவரை, போலீசார் சமாதானப்படுத்தி டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.