/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டூவீலர்கள் நேருக்குநேர் மோதல்: 2 பேர் பலி
/
டூவீலர்கள் நேருக்குநேர் மோதல்: 2 பேர் பலி
ADDED : ஜன 04, 2025 07:20 AM
புன்செய்புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், பைக்கை ஓட்டிய இருவரும் பலியா-கினர். அமர்ந்து சென்ற தாய், மகள் படுகாயத்துடன் சிகிச்சை பெறுகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கடத்தூர், பள்ளிக்கூட பிரிவு பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி, 64; டேங்க் ஆப்பரேட்டர். தனது உறவின-ரான கன்னியாகுமரி, 46, அவரது மகள் சுப்புலட்சுமி, 23, ஆகி-யோருடன் ஹோண்டா யுனிகார்ன் பைக்கில் கோயமுத்துாருக்கு கோவிலுக்கு சென்றார். நேற்று மாலை ஊருக்கு திரும்பினர்.
கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு மாவட்ட எல்லையான நீலிபாளையம் ரைஸ் மில் மேடு அருகே, எதிரே அதிவேகமாக வந்த டியூக் பைக் கண்ணிமைக்கும் நேரத்தில், ரங்-காசமி ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் இரு பைக்குக-ளிலும் வந்த நான்கு பேர் துாக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்தில் ரங்கசாமி, டியூக் பைக்கை ஓட்டி வந்த நம்பியூரை சேர்ந்த சுரேஷ்குமார், 20, பலியாகினர்.இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து காயம-டைந்து உயிருக்கு போராடிய தாய், மகளை மீட்டு அன்னுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சேவூர் போலீசார் விசாரணையில் பைக்கை ஓட்டி வந்த சுரேஷ்குமார், கல்லுாரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, விசைத்தறி வைத்து தொழில் செய்து வந்ததும், பைக்கை அதிவேகமாக, அஜாக்கிரதையாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தனர்.