/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஸ்கூட்டரில் இருந்து விழுந்து இரு வாலிபர்கள் பலி
/
ஸ்கூட்டரில் இருந்து விழுந்து இரு வாலிபர்கள் பலி
ADDED : டிச 31, 2024 07:38 AM
ஓசூர்: தளி அருகே, ஸ்கூட்டரில் இருந்து பள்ளத்தில் தவறி விழுந்து இரு வாலிபர்கள் பலியாகினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த ஜவளகிரி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ், 24; பிக்கப் வாகன டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் திலீப்குமார்,20; கூலித்தொழிலாளி. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு, தளியில் இருந்து ஜவளகிரி நோக்கி சுசூகி ஆக்சஸ் ஸ்கூட்டரில் ஊருக்கு சென்றனர். வெங்கடேஷ் ஸ்கூட்டரை ஓட்டி சென்றார். சொல்லேபுரம் கிராமம் அருகே சென்ற போது, சாலையோரம் இருந்த சில அடி ஆழ பள்ளத்தின் புதரில் ஸ்கூட்டருடன் தவறி விழுந்தனர்.
இதில் படுகாயமடைந்த வெங்கடேஷ், திலீப்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இரவில் இருவரும் வீட்டிற்கு வராத நிலையில், அவர்களது குடும்பத்தினர் நேற்று காலை தேடி பார்த்தனர். அப்போது, சொல்லேபுரம் அருகே சாலையோர பள்ளத்தில் விழுந்து இறந்து கிடப்பது தெரிந்தது. தளி போலீசார் சடலத்தை மீட்டு, விசாரித்து வருகின்றனர்.