/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாளை சேலம் வரும் உதயநிதி; வரவேற்க கட்சியினருக்கு அழைப்பு
/
நாளை சேலம் வரும் உதயநிதி; வரவேற்க கட்சியினருக்கு அழைப்பு
நாளை சேலம் வரும் உதயநிதி; வரவேற்க கட்சியினருக்கு அழைப்பு
நாளை சேலம் வரும் உதயநிதி; வரவேற்க கட்சியினருக்கு அழைப்பு
ADDED : அக் 18, 2024 07:22 AM
சேலம்: நாளை சேலம் வரும் துணை முதல்வர் உதயநிதிக்கு, தலைவாசல் டோல்கேட் அருகில் வரவேற்பு அளிக்க, கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் திரண்டு வர, மாவட்ட செயலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
சேலம் தி.மு.க., மாவட்ட செயலர்கள் ராஜேந்திரன், செல்வகணபதி, சிவலிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி, அக்., 19, சனிக்கிழமை பிற்பகலில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின், மாலை 4:00 மணிக்கு, தலைவாசல் டோல்கேட் வந்தடைகிறார். துணை முதல்வராக பொறுப்பேற்ற பின், முதன்முதலாக சேலம் மாவட்டம் வருகை தருகிறார். தலைவாசல் டோல்கேட் அருகில், சேலம் கிழக்கு,
சேலம் மேற்கு, சேலம் மத்திய மாவட்டங்களின் சார்பில், பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. மூன்று மாவட்டங்களிலிருந்தும் கட்சி நிர்வாகிகள், பல்வேறு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் திரண்டு துணை முதல்வரை வரவேற்க வர வேண்டும். வரவேற்பு குறித்த பேனர்கள், பட்டாசு, பொன்னாடை, பூங்கொத்துகளை அவசியம் தவிர்த்திட வேண்டும். புத்தகங்கள், கைத்தறி ஆடைகளை மட்டும் வழங்கி வரவேற்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.