/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
12 புது தாழ்தள பஸ் சேவை துவக்கி வைத்த உதயநிதி
/
12 புது தாழ்தள பஸ் சேவை துவக்கி வைத்த உதயநிதி
ADDED : செப் 17, 2025 01:58 AM
சேலம் சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், துணை முதல்வர் உதயநிதி நேற்று சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில், 12 புதிய தாழ்தள பஸ்கள், 5 நகர பி.எஸ் - 6 மகளிர் விடியல் பயண பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும் பள்ளி, கல்லுாரி மாணவ,மாணவியர், மகளிர், மக்கள் பயன்பெறும் வகையில், 2 நகர பஸ்களின் வழித்தட மாற்றம் செய்தும், 8 நகர பஸ்களின் வழிதடத்தை நீட்டிப்பு செய்தும், ஒரு நகர பஸ் மூலம், கூடுதல் வசதிையும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் ராஜேந்திரன், எம்.பி.,க்கள் செல்வகணபதி, மணி, பிரகாஷ், கலெக்டர் பிருந்தாதேவி, அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.