ADDED : ஜூலை 06, 2026 01:25 AM
அ நிறம் | அளவு
சேலம்: மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் முருகன், நேற்று முன்தினம் சேலம் ரயில்வே ஸ்டேஷன் வந்தார்.
பா.ஜ., நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து மாவட்ட கட்சி அலுவலகத்தில், நிர்வாகிகள் ஆலோனை கூட்டம் நடந்தது. அதில் கட்சி வளர்ச்சி பணி, பிரதமரின், 12 ஆண்டு சாதனை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து, அமைச்சர் முருகன், பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் சசிகுமார், சுற்றுச்சூழல் மற்றும் பேரிடர் மேலாண் பிரிவு மாநில தலைவர் கோபிநாத் உள்-ளிட்டோர் பங்கேற்றனர்.
