ADDED : ஜூலை 06, 2026 01:24 AM
அ நிறம் | அளவு
பனமரத்துப்பட்டி: சேலம், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து பூலாவரி, நாழிக்கல்-பட்டி, வெடிக்காரன்புதுார், பாரப்பட்டி, பசுவநத்தம்பட்டி வழியே மல்லுார் வரை, அரசு டவுன் பஸ், டம் எண்: 72 இயங்கி-யது. கிராம பகுதி பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், விவசா-யிகளுக்கு உதவியாக இருந்தது.
இதுகுறித்து வெடிக்காரன்புதுார் மக்கள் கூறியதாவது:கொரோனா காலத்துக்கு பின், வெடிக்காரன்புதுார் வழியே 72 எண் கொண்ட டவுன் பஸ் இயக்கப்படவில்லை. கிராம பகுதி பள்ளி மாணவ, மாணவியர் சிரமப்படுகின்றனர். பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து சீலநாயக்கன்பட்டி வழியே வெடிக்காரன்-புதுார், பாரப்பட்டி, பசுவநத்தம்பட்டி வரை, டவுன் பஸ் இயக்க-வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
