தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'போதை'யில் கார் ஓட்டி 8 வாகனம் மீது மோதல்

'போதை'யில் கார் ஓட்டி 8 வாகனம் மீது மோதல்

'போதை'யில் கார் ஓட்டி 8 வாகனம் மீது மோதல்


ADDED : ஜூலை 06, 2026 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2026 01:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் நேற்று இரவு, 8:00 மணிக்கு, 'ஐ10' கார் தாறுமாறாக ஓடி, கென்னடி நகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் நிறுத்-தப்பட்டிருந்த, 2 கார், 6 பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதி-விட்டு, அந்த கார் நிற்காமல் சென்றது. சக வாகன ஓட்டிகள், மக்கள், விரட்டி சென்று அந்தகாரை மடக்கி நிறுத்தினர்.

பிறகு, அந்த காரை ஓட்டிச்சென்றவரை பிடித்து சூரமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், சூரமங்கலம், தர்மன் நகர், 3வது கிராஸ், ரத்தினசபாபதி மகன் லோகேஷ், 29, என்பதும், 5 ரோடு அருகே கார் வாட்டர் சர்வீஸ் தொழில் செய்யும் அவர், 'போதை'யில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தி-யதும் தெரிந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us