/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இறக்கப்பட்ட பருப்பு மூட்டைகள் 12 நாளுக்கு பின் விமோசனம்
/
இறக்கப்பட்ட பருப்பு மூட்டைகள் 12 நாளுக்கு பின் விமோசனம்
இறக்கப்பட்ட பருப்பு மூட்டைகள் 12 நாளுக்கு பின் விமோசனம்
இறக்கப்பட்ட பருப்பு மூட்டைகள் 12 நாளுக்கு பின் விமோசனம்
ADDED : அக் 30, 2025 02:36 AM
இடைப்பாடி, இடைப்பாடியில் உள்ள, தமிழக நுகர்பொருள் வாணிப கிடங்கு கிளை குடோனில் இருந்து, இடைப்பாடி தாலுகா பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அத்யாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் சில நாட்களாக, 500 டன்னுக்கு மேற்பட்ட துவரம் பருப்பு மூட்டைகள், 20க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கிடங்குக்கு அனுப்பப்பட்டு, இறக்கப்படாமல், 12 நாட்களாக சாலையோரம் நிறுத்தி டிரைவர்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
இதுகுறித்து நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. தொடர்ந்து அனைத்து லாரிகளில் இருந்து துவரம்பருப்பு மூட்டைகள், கிடங்குகளில் இறக்கி வைக்கப்பட்டன.
இதுகுறித்து குடோன் தர கட்டுப்பாட்டு ஆய்வாளர் கொழுஞ்சியப்பனிடம் கேட்டபோது, ''அனைத்து லாரிகளிலும் இருந்த துவரம்பருப்பு மூட்டைகள் கிடங்குளில் இறக்கி வைக்கப்பட்டன,'' என்றார்.
இதன்மூலம், குஜராத் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து, 12 நாட்களாக துவரம்பருப்பு மூட்டைகளுடன் சாலையோரங்களில் காத்திருந்த லாரிகள், அதன் டிரைவர்களுக்கு விமோசனம் கிடைத்தது.

