/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தல்
/
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தல்
ADDED : டிச 09, 2024 07:21 AM
சேலம்: தமிழ்நாடு அருந்ததியர் கூட்டமைப்பின், மண்டல அளவில் ஆலோசனை கூட்டம், சேலத்தில் நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற பின், ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் கூறியதாவது: உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சரியான தரவுகள் அடிப்படையில் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள, 18 சதவீத இட ஒதுக்கீட்டை பிரித்து, உரிய தரவுகளின்படி உள் ஒதுக்கீடு தேவை. அதற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அப்போது மட்டுமே, இட ஒதுக்கீடு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிட்டும். 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி, 200 இடங்களில் வெற்றி பெற, அருந்ததியர் கூட்டமைப்பு களப்பணியாற்றும். இவ்வாறு அவர் கூறினார். பொதுச்செயலர் ரவிக்குமார், மாவட்ட செயலர் சந்திரன், நிர்வாகிகள் உடனிருந்தனர்.