/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரேஷன் கடையை சூழ்ந்த மழைநீர் நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்
/
ரேஷன் கடையை சூழ்ந்த மழைநீர் நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்
ரேஷன் கடையை சூழ்ந்த மழைநீர் நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்
ரேஷன் கடையை சூழ்ந்த மழைநீர் நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்
ADDED : டிச 05, 2024 07:41 AM
பனமரத்துப்பட்டி: மல்லுார் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் அருகே, இரு ரேஷன் கடைகள் உள்ளன. அங்கிருந்து, 2,000க்கும் மேற்-பட்ட கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன. கடந்த, 2 இரவு பெய்த
கனமழையால், ரேஷன் கடையை தண்ணீர் சூழ்ந்தது. அத்துடன் அத்திக்குட்டையில் இருந்து வந்த கழிவுநீரும்
சேர்ந்தது. தண்ணீர் குளம்போல் தேங்கியதால் ரேஷன் கடைக்கு செல்ல முடியாமல், மக்கள் தவித்தனர். மல்லுார் டவுன் பஞ்சாயத்து சார்பில் நேற்று, பொக்லைன் மூலம் சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையோரம் உள்ள
கழிவு நீர் கால்-வாயில் தண்ணீர் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது. அந்த வழியே குறைந்த அளவில் தண்ணீர்
சென்றது. தொடர்ந்து மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி கால்வாயில் விட்டனர். பின் ரேஷன் கடையை சூழ்ந்த
தண்ணீர் அளவு குறைந்தது. இதுகுறித்து கார்டுதாரர்கள் கூறுகையில், 'ஒவ்வொரு முறை மழை வரும்போதும், ரேஷன் கடையை தண்ணீர்
சூழ்ந்து விடுகிறது. ரேஷன் கடை முன் தண்ணீர் தேங்காமல் இருக்க, நிரந்தர தீர்வு காண வேண்டும்' என்றனர்.