/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
21 சீட் சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி அளிக்க வலியுறுத்தல்
/
21 சீட் சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி அளிக்க வலியுறுத்தல்
21 சீட் சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி அளிக்க வலியுறுத்தல்
21 சீட் சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி அளிக்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 24, 2025 01:16 AM
சேலம்:சேலம் மாவட்ட மேக்ஸி கேப் வாகன உரிமையாளர் சங்க தலைவர் ராகவன் தலைமையில் திரளானோர், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனு:
மேக்ஸி கேப் வாகன பர்மிட், 1974ல் வழங்கப்பட்டது. பின், 50 ஆண்டாக பர்மிட்டில் அனுமதித்த, 12 பிளஸ் 1 நபர் என்ற எண்ணிக்கையில் மாற்றம் செய்யவில்லை. 20 பிளஸ் 1 சீட் வரை, டிராவல்ஸ் வாகனங்களுக்கு பர்மிட்டை உயர்த்தி தரக்கோரி, பல ஆண்டாக முறையிட்டு வருகிறோம்.
பாடி கட்டி இயக்கப்படும் கோச் வாகனங்களில், 20 சீட் வரை அமைக்கப்பட்டதால், எங்களால் அண்டை மாநில வாடகைக்கு இயக்க முடிவதில்லை. அவசர கதியில் செல்லும் சூழலில் லட்சக்கணக்கில் அபராதம் செலுத்தி வாழ்க்கை தரத்தை இழந்து கொண்டிருக்கிறோம்.
சேலம் மாவட்டத்தில், 5,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. அதனால், 12 பிளஸ் 1 சீட் பர்மிட்டை, 20 பிளஸ் 1 சீட் பர்மிட்டாக உயர்த்தி சுற்றுலாத்துறையை காக்க முன்வரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செயலர் ராஜ்குமார், பொருளாளர் சிவக்குமார், துணைத்தலைவர் செல்வகுமார், அஸ்தம்பட்டி மண்டல தலைவர் மணிகண்டன், வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் பங்கேற்றனர்.

