ADDED : மே 14, 2025 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி :நெருஞ்சிப்பேட்டை - பூலாம்பட்டியில் தேக்கப்படும் நீர் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அதற்கு தேக்கப்படும் நீர், ஷட்டர் மூலம் அடைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம், 25ல் ஷட்டர் பராமரிப்பு பணிக்கு, தேக்கப்பட்டிருந்த நீர் திறந்து விடப்பட்டது.
தற்போது பராமரிப்பு நிறைவால், நெருஞ்சிப்பேட்டை கதவணையில் நேற்று முதல் தண்ணீர் தேக்கப்பட்டது. இதனால் சேலம் மாவட்டம் பூலாம்பட்டியில் இருந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள நெருஞ்சிப்பேட்டைக்கு செல்ல, விசைப்படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.