/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாஜ்பாய் நுாற்றாண்டு விழா இலவச காஸ் இணைப்பு வழங்கல்
/
வாஜ்பாய் நுாற்றாண்டு விழா இலவச காஸ் இணைப்பு வழங்கல்
வாஜ்பாய் நுாற்றாண்டு விழா இலவச காஸ் இணைப்பு வழங்கல்
வாஜ்பாய் நுாற்றாண்டு விழா இலவச காஸ் இணைப்பு வழங்கல்
ADDED : டிச 26, 2025 04:51 AM
சேலம்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நுாற்றாண்டு பிறந்தநாளை ஒட்டி, சேலம் மாநகர் மாவட்ட பா.ஜ., மற்றும் வேல்முருகன் காஸ் ஏஜன்சி இணைந்து, 'மத்திய அரசின் உஜ்வாலா' திட்டத்தில், இலவச காஸ் இணைப்பு வழங்கும் விழா நேற்று நடந்தது.
பா.ஜ., மாநகர் மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். இதில், 260 பயனாளிகளுக்கு, இலவச காஸ் இணைப்பு வழங்கப்-பட்டது. சீலநாயக்கன்பட்டி மண்டல தலைவர் காளிமுத்து, சுற்-றுச்சூழல் பிரிவு மாநில தலைவர் கோபிநாத் உள்ளிட்டோர் பங்-கேற்றனர்.அதேபோல், இளம்பிள்ளை அருகே நடுவனேரியில், 500 பயனா-ளிகளுக்கு, இலவச காஸ் இணைப்பு, காஸ் அடுப்புகளை, சேலம் மேற்கு மாவட்ட தலைவர் ஹரிராமன் வழங்கினார். இடங்கண-சாலை மண்டல தலைவர் கலைச்செல்வி, மேற்கு மாவட்ட நெச-வாளர் பிரிவு தலைவர் செங்கோட்டையன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்தில், ஒன்றிய தலைவர் நிர்-மலா தலைமையில், வாஜ்பாய் பிறந்தநாள் விழா கொண்டாடப்-பட்டது. மாவட்ட விவசாய பிரிவு தலைவர் வெங்கடாசலம், மாவட்ட செயலர் கந்தசாமி உள்ளிட்டோர், மக்களுக்கு இனிப்பு வழங்கினர். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு தலைவர் தமிழ்நேசன், நகர தலைவர் ஆதிராஜா உள்ளிட்டோர் பங்கேற்-றனர்.
ஓமலுாரில், ஒன்றிய தலைவர் சேதுபதி தலைமையில் பா.ஜ.,வினர், மக்களுக்கு இனிப்பு, மரக்கன்று வழங்கி கொண்டா-டினர். ஓமலுார் மேற்கு ஒன்றிய தலைவர் சுரேந்தர் தலைமையில் கட்சியினர், மேச்சேரி பிரிவு சாலையில் கொண்டாடினர்.

