/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வக்கீல் சங்க கிரிக்கெட்: வ.உ.சி., - வேலுநாச்சியார் அணிகள் வெற்றி
/
வக்கீல் சங்க கிரிக்கெட்: வ.உ.சி., - வேலுநாச்சியார் அணிகள் வெற்றி
வக்கீல் சங்க கிரிக்கெட்: வ.உ.சி., - வேலுநாச்சியார் அணிகள் வெற்றி
வக்கீல் சங்க கிரிக்கெட்: வ.உ.சி., - வேலுநாச்சியார் அணிகள் வெற்றி
ADDED : டிச 09, 2024 07:22 AM
மேட்டூர்: மேட்டூர் அணை வக்கீல்கள் சங்கம் சார்பில் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது. அதில் ஆண்கள் பிரிவில், வ.உ.சி., அம்பேத்கர், தீரன்சின்னமலை, ராஜராஜசோழன் என, 4 அணிகள், பெண்கள் பிரிவில் வேலு நாச்சியார், ஜான்சிராணி என, 2 அணிகள் பங்கேற்றன.
சேலம் சார்பு நீதிபதி கமலக்கண்ணன், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் - 2 மாஜிஸ்திரேட் மயில்சாமி தொடங்கி வைத்தனர். இறுதிப்போட்டியில் வ.உ.சி., - அம்பேத்கர் அணிகள் மோதின. அதில், 28 ரன்கள் வித்தியாசத்தில், வ.உ.சி., அணி வெற்றி பெற்றது.
அதேபோல் பெண்கள் பிரிவில், வேலுநாச்சியார் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற ஆண்கள் அணிக்கு, மூத்த வக்கீல்கள் ரங்கநாதன், காளமேகம், சங்கத்தலைவர் ஜேம்ஸ்சார்லஸ், சதாசிவம் பரிசு வழங்கினர். வெற்றி பெற்ற மகளிர் அணிக்கு, வக்கீல்கள் கலா, செல்வி, வளர்மதி, சுமதி ஆகியோர் பரிசு வழங்கினர்.