/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வேன் - பைக் மோதல்; மாணவர் உள்பட 2 பேர் பலி
/
வேன் - பைக் மோதல்; மாணவர் உள்பட 2 பேர் பலி
ADDED : மே 29, 2024 07:53 AM
நங்கவள்ளி : ஓமலுார் அருகே தொளசம்பட்டி, கண்காணிப்பட்டியை சேர்ந்த ராது மகன் கலையரசன், 19. வனவாசியில் உள்ள பாலிடெக்னிக் கல்லுாரியில், 3ம் ஆண்டு படித்து வந்தார். இவரது உறவினர், வீரக்கல் பகுதியை சேர்ந்த சாமிநாதன், 22. ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். இருவரும் நேற்று குஞ்சாண்டியூரில் இருந்து, கே.டி.எம்., பைக்கில் நங்கவள்ளி நோக்கி புறப்பட்டனர். சாமிநாதன் ஓட்டினார். மதியம், 1:30 மணிக்கு, நங்கவள்ளி டி.எம்.பி., நகர் அருகே, அதிவேகமாக வந்ததால், கட்டுப்பாட்டை இழந்த பைக், எதிரே வந்த, 'டாடா ஏசி' மினி சரக்கு வேன் மீது மோதியது. இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். மக்கள், அவர்களை மீட்டு, மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் இருவரும் இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'கண்காணிப்பட்டியில் நடந்த கோவில் திருவிழாவில் கறி எடுத்துக்கொண்டு சாமிநாதன் வீட்டுக்கு சென்றனர். அங்கு கொடுத்துவிட்டு மீண்டும் கோவில் திருவிழாவுக்கு வந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. ஹெல்மெட்டும் அணியவில்லை. இதுகுறித்து விசாரணை நடக்கிறது' என்றனர்.