ADDED : ஜூன் 18, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர், மேச்சேரி, பள்ளிப்பட்டி ஊராட்சி, காலாண்டியூர் காட்டுவளவை சேர்ந்தவர் பச்சியப்பன், 60. இவரது மனைவி செல்வம்மாள். இவர்களது மகன்கள் கருப்பண்ணன், 33. சங்கர், 31. இருவருக்கும் திருமணமாகவில்லை. சங்கர், சரக்கு வேன் டிரைவராக பணிபுரிந்தார்.
செல்வம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாததால் மாத்திரை வாங்க, நேற்று முன்தினம் இரவு, 7:15 மணிக்கு சங்கர், ெஹல்மெட் அணியாமல் பல்சர் பைக்கில் வெடிக்காரனுார் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது டிராக்டர் டிரைலர் சாலையில் நின்றுள்ளது. இதில் சங்கர் பைக், டிரைலர் மீது மோதியது. படுகாயம் அடைந்த சங்கர், மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். நேற்று பச்சியப்பன் புகார்படி, மேச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.