/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆர்.டி.ஓ., அறிவுரையை ஏற்ற வேன் டிரைவர்கள்
/
ஆர்.டி.ஓ., அறிவுரையை ஏற்ற வேன் டிரைவர்கள்
ADDED : நவ 20, 2025 01:59 AM
ஆத்துார், ஆத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி நுழைவாயில் முன் பள்ளத்தை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு சரக்கு வேன் நிறுத்தி வரும் டிரைவர்கள் சிலர், பணியை தடுத்து, ஆசிரியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து தலைமை ஆசிரியர் சந்திரசேகர், கலெக்டர், ஆத்துார் ஆர்.டி.ஓ., உள்ளிட்ட அலுவலர்களுக்கு புகார் அனுப்பினார்.
இதனால் ஆத்துார் ஆர்.டி.ஓ., தமிழ்மணி, பள்ளி ஆசிரியர்கள், வேன் டிரைவர்களை விசாரணைக்கு வரும்படி அழைத்தார். அதன்படி நேற்று, அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், தலைமை ஆசிரியர் சந்திரசேகர், வேன் டிரைவர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதில், 'வேன் டிரைவர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம். மாணவர்கள் நலன் கருதி, இப்பணி நடக்கிறது' என, ஆர்.டி.ஓ., அறிவுறுத்தினார். அதை ஏற்று, டிரைவர்கள் சென்றனர்.

