/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வேன் பின்புறம ்பைக் மோதல் தொழிலாளி பலி: 2 பேர் காயம்
/
வேன் பின்புறம ்பைக் மோதல் தொழிலாளி பலி: 2 பேர் காயம்
வேன் பின்புறம ்பைக் மோதல் தொழிலாளி பலி: 2 பேர் காயம்
வேன் பின்புறம ்பைக் மோதல் தொழிலாளி பலி: 2 பேர் காயம்
ADDED : அக் 15, 2024 07:02 AM
மேட்டூர்: பள்ளி வேன் பின்புறம் பைக் மோதியதில் தொழிலாளி சம்பவம் இடத்தில் உயிரிழந்தார். இருவர் காயம் அடைந்தனர்.
கொளத்துார், தின்னப்பட்டி ஊராட்சி, வெள்ளக்கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சந்தோஷ்,25. மனைவி வைஸ்ணவி, 21. தம்பதியருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. அதே பகுதியை சேர்ந்தவர்கள் யுவராஜ், 21, ஸ்ரீகாந்த், 22. திருமணம் ஆகவில்லை. கூலி தொழில் செய்யும் நண்பர்களான மூவரும் நேற்று முன்தினம் இரவு, கத்திரிமலை கவுரியம்மன் கோவில் பண்டிகைக்கு சென்றுள்ளனர். நேற்று காலை யுவராஜ்க்கு சொந்தமான பஜாஜ் ஸ்போர்ட்ஸ் பைக்கில் மூவரும் கருங்கல்லுாரில் இருந்து கொளத்துார் நோக்கி சென்றனர். பைக்கை யுவராஜ் ஹெல்மெட் அணியாமல் அதிவேகமாக ஓட்டியுள்ளார்.கொளத்துார்-நீதிபுரம் நான்கு ரோட்டுக்கு முன் நேற்று காலை, 8:45 மணிக்கு தனியார் பள்ளி வேன் சென்றுள்ளது. அந்த வேன் திடீரென பக்கவாட்டிலுள்ள சாலையில் திரும்பியது. அப்போது வேகமாக வந்த பைக் யுவராஜ் கட்டுப்பாட்டை இழந்து வேனில் மோதியது. விபத்தில் சந்தோஷ் தலையில் அடிபட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஸ்ரீகாந்த் சேலம் அரசு மருத்துவமனையிலும், காயம் அடைந்த யுவராஜ் மேட்டூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து கொளத்துார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.