/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வி.ஏ.ஓ., அலுவலகத்தில் பதுங்கிய கட்டுவிரியன் பாம்பு
/
வி.ஏ.ஓ., அலுவலகத்தில் பதுங்கிய கட்டுவிரியன் பாம்பு
வி.ஏ.ஓ., அலுவலகத்தில் பதுங்கிய கட்டுவிரியன் பாம்பு
வி.ஏ.ஓ., அலுவலகத்தில் பதுங்கிய கட்டுவிரியன் பாம்பு
ADDED : ஜூன் 25, 2024 02:34 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி சந்தைபேட்டை அருகே வி.ஏ.ஓ.,அலுவலகம் உள்ளது. அதன் பின்புறத்தில், மரம், செடி புதர் மண்டியுள்ளது. நேற்று காலை, 11:00 மணிக்கு அலுவலகம் திறந்து வைக்கப்பட்டிருந்தது. வி.ஏ.ஓ., வருகையை எதிர்பார்த்து, கிராம உதவியாளர்கள், பொதுமக்கள் காத்திருந்தனர்.
அப்போது, பின் வாசல் வழியாக கட்டுவிரியன் பாம்பு ஒன்று அலுவலகத்தில் நுழைந்தது. அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டதால், வாசல் கதவுக்கு அடியில் உள்ள சிமென்ட் வெடிப்பில் புகுந்து பதுங்கி கொண்டது. பொதுமக்கள், வெடிப்பில் தண்ணீர் ஊற்றியும், சிமென்ட் கலவையை தட்டி, பாம்பை வெளியேற்ற முயற்சித்தனர். ஆனால் வெளியே வரவில்லை. இதையடுத்து மதியத்திற்கு மேல் அலுவலகத்தை பூட்டி சென்றனர். அலுவலகத்தில் பாம்பு பதுங்கி உள்ளதால், கிராம உதவியாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.