தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வாரணாசி - எர்ணாகுளம் சிறப்பு ரயில் இயக்கம்

வாரணாசி - எர்ணாகுளம் சிறப்பு ரயில் இயக்கம்

வாரணாசி - எர்ணாகுளம் சிறப்பு ரயில் இயக்கம்


ADDED : ஜன 29, 2026 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2026 04:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்:சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திருநாவாயாவில் நடக்கும் மகா மகோத்சவ விழாவையொட்டி, நாளை, (30ல்,) வாரணாசி - எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகி-றது. மாலை, 4:30 மணிக்கு வாரணாசியில் புறப்பட்டு, பிப்.,1, இரவு, 10:00 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பை சென்றடைகிறது.

இது பிப்., 1, காலை, 11:03 மணிக்கு ஜோலார்பேட்டை, 12:35க்கு சேலம், மதியம், 1:40க்கு ஈரோடு, 2:38 மணிக்கு திருப்பூர், 3:55க்கு கோவை சந்திப்பு, 4:28 க்கு போத்தனுாரில் நின்று செல்லும்.மறு மார்க்கத்தில், எர்ணாகுளம் - வாரணாசி சிறப்பு ரயில், பிப்.,3ல், இயக்கப்படுகிறது. அன்று, இரவு, 8:00 மணிக்கு எர்-ணாகுளத்தில் புறப்பட்டு, 6, அதிகாலை, 3:00 மணிக்கு வாரணா-சியை அடைகிறது. இது, 4ம் தேதி நள்ளிரவு, 12:48 க்கு போத்-தனுார், 1:30க்கு கோவை சந்திப்பு, 2:38 க்கு திருப்பூர், 3:50க்கு ஈரோடு, அதிகாலை, 5:00 மணிக்கு சேலம், 6:48 க்கு ஜோலார்-பேட்டையில் நின்று செல்லும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்-வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us