/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தீரன் சின்னமலை நினைவிடத்தில் பல்வேறு கட்சியினர் மரியாதை
/
தீரன் சின்னமலை நினைவிடத்தில் பல்வேறு கட்சியினர் மரியாதை
தீரன் சின்னமலை நினைவிடத்தில் பல்வேறு கட்சியினர் மரியாதை
தீரன் சின்னமலை நினைவிடத்தில் பல்வேறு கட்சியினர் மரியாதை
ADDED : ஆக 04, 2025 08:21 AM
சங்ககிரி: தீரன் சின்னமலை நினைவிடத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., பா.ஜ., கட்சியினர், மரியாதை செலுத்தினர்.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தை ஒட்டி, சேலம் மாவட்டம் சங்ககிரி மலைக்கோட்டை அடிவாரத்தில், அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது படத்துக்கு, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, ஈரோடு - பவானி பிரிவு சாலையில் உள்ள தீரன் சின்னமலை நினைவு சின்னத்தில், அமைச்சர் ராஜேந்திரன், மரியாதை செலுத்தினார்.
சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, தி.மு.க.,வை சேர்ந்த, எம்.பி.,க்கள் செல்வகணபதி, சிவலிங்கம், எஸ்.பி., கவுதம் கோயல், சங்ககிரி ஆர்.டி.ஓ., லோகநாயகி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து, தீரன் சின்னமலை நினைவு சின்னத்தில், அ.தி.மு.க.,வை சேர்ந்த, முன்னாள் அமைச்சர்கள் தங்க மணி, செம்மலை, சரோஜா, பா.ஜ.,வை சேர்ந்த, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி, மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள், மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க.,வை சேர்ந்த, முன்னாள் எம்.பி., சந்திரசேகரன், எம்.எல்.ஏ.,க்களான, சங்ககிரி சுந்தரராஜன், ஓமலுார் மணி, வீரபாண்டி ராஜமுத்து, சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், பா.ஜ., சேலம் மேற்கு மாவட்ட தலைவர் ஹரிராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பா.ம.க., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்தி தலைமை யில் நிர்வாகிகள், மரியாதை செலுத்தினர். மாநில செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை, சேலம் தெற்கு மாவட்ட தலைவர் முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதேபோல் சேலம்,
குரங்குச்சாவடி அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை படத்துக்கு, சேலம் கொங்கு வேளாள கவுண்டர் சங்கம் சார்பில், ஒருங்கிணைப்பாளர் சுகுமார் தலைமையில் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
அதே சங்கம் சார்பில், பனமரத்துப்பட்டி, சந்தைப்பேட்டையில், ஒன்றிய நிர்வாகி சுரேஷ் தலைமையில் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
ஓமலுாரில், கொ.ம.தே.க.,வின் சேலம் வடக்கு மாவட்ட செயலர் நல்லதம்பி தலைமையில் கட்சி யினர், தீரன் சின்னமலை படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். அதன் அருகே தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் அஞ்சலி செலுத்தினர்.