/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பல்வேறு விளையாட்டு போட்டி; 800 மாற்றுத்திறனாளி பங்கேற்பு
/
பல்வேறு விளையாட்டு போட்டி; 800 மாற்றுத்திறனாளி பங்கேற்பு
பல்வேறு விளையாட்டு போட்டி; 800 மாற்றுத்திறனாளி பங்கேற்பு
பல்வேறு விளையாட்டு போட்டி; 800 மாற்றுத்திறனாளி பங்கேற்பு
ADDED : டிச 04, 2025 06:13 AM
சேலம்: உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி, சேலம் காந்தி மைதானத்தில், நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. கலெக்டர் பிருந்தாதேவி தொடங்கி வைத்தார்.
செவித்திறன், பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோர், கடுமையான உடல், கால்கள் பாதிக்கப்பட்டோர், அறிவுசார் குறையுடையோர், ஸ்பாஸ்டிக் குழந்தைகளுக்கான போட்டிகள், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் முறையே போட்டிகள் தனித்தனியே நடந்தன. 50, 75, 100, 150, 200, 400, 800 மீட்டர் ஓட்டம், 50 மீ., நடைபோட்டி, நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டுத்தட்டு எறிதல், நின்று நீளம் தாண்டுதல், ஓடி நீளம் தாண்டுதல், தடை தாண்டி ஓடுதல், கிரிக்கெட் பந்து எறிதல், உருளைக்கிழங்கு சேகரித்தல் உள்ளிட்ட போட்டிகளில், 800 பேர் தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.
ஒவ்வொரு பிரிவிலும் தலா, 3 பேர் வீதம் வெற்றி பெற்ற ஆண்கள், பெண்கள் முறையே மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர். வரும், 10ல் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் விழாவில் பரிசு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு பள்ளி
ஆத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார வள மையத்தில், மாற்றுத்திறனாளி கள் தினம் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் சந்திரசேகர் தலைமை வகித்தார். அப்போது ஒற்றுமையை வளர்த்தல் குறித்து உறுதிமொழி எடுத்தனர். தொடர்ந்து மாணவர்களது தனித்திறமைகளை வெளிப்படுத்த, தனி நடிப்பு, மாறுவேடம், வடிவம் சேர்த்தல், கதை சொல்லுதல், இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட்டன.
கொடியேற்றம்
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கம், மேட்டூர் கிளை சார்பில் மேட்டூர், சின்னபார்க் முன், சங்க கொடியேற்றினர். வட்ட தலைவர் பவுல்ராஜ், செயலர் சின்ராஜ், பொருளாளர் பெரியண்ணன் உள்ளிட்டோர், மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

