/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காது கேளாதோர் பள்ளி மாணவருக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள்
/
காது கேளாதோர் பள்ளி மாணவருக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள்
காது கேளாதோர் பள்ளி மாணவருக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள்
காது கேளாதோர் பள்ளி மாணவருக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள்
ADDED : ஜூலை 19, 2025 01:11 AM
சேலம், காது கேளாதோர் தினத்தை ஒட்டி, சேலம் மாவட்ட காது கேளாதோர் பொதுநல முன்னேற்ற சங்கம் சார்பில், காது கேளாதோர் பள்ளி மாணவ, மாணவியருக்கு தனித்திறன் போட்டி காந்தி மைதானத்தில் நேற்று நடந்தது. சங்கத்தலைவர் அருண்குமார், பொதுச்செயலர் பயஸ்கான், பொருளாளர் சிந்து தொடங்கி வைத்தனர்.
அதில், 50, 100, 200, 400 மீ., ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், நடனம், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அரசு, அதன் உதவி பெறுபவை, தனியார் பள்ளிகளை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், திறமைகளை வெளிப்படுத்தினர்.
மாணவர்களின் பெற்றோர், கைதட்டி உற்சாகமூட்டினர். தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் செபாஸ்டின், சிறப்பாசிரியர் கவியரசு உள்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், மாநில போட்டியில் விளையாட உள்ளதாக, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.