/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கடனை திருப்பி கேட்ட பெண்ணிடம் அத்துமீறல் வி.சி., கட்சி - மாவட்ட செயலர் கைது

ADDED : செப் 03, 2025 02:38 AM
ஆத்துார், கடனை திருப்பி கேட்ட பெண்ணை, மானபங்கப்படுத்த முயற்சி செய்த, வி.சி., கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி, மாவட்ட செயலரை, போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் நரசிங்புரம், தெற்கு தில்லை நகரை சேர்ந்தவர் இளையராஜா, 44. வி.சி., கட்சியின், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட செயலராக உள்ளார். இவர், 8 ஆண்டுக்கு முன், நரசிங்கபுரம், பெரியார் நகரை சேர்ந்த சுமதி, 45, என்பவரிடம், 6 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். இத்தொகையை கேட்டபோது, இளையராஜா தர மறுத்தார். இதனால் சுமதி, ஆத்துார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதுதொடர்பாக கடந்த ஜூலை, 13ல், ஆலமரம் பஸ் ஸ்டாப் பகுதியில், இருவரும் தகராறு செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று, விநாயகபுரம், கூட்ரோடில் நடந்து சென்ற சுமதியை வழிமறித்து தாக்கிய இளையராஜா, தொடர்ந்து சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயன்றார்.
சுமதி புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார் விசாரித்து, மானபங்க முயற்சி உள்பட, 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து இளையராஜாவை, நேற்று கைது செய்தனர்.