ADDED : ஆக 11, 2025 08:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: வரும், 17ல், வி.சி., தலைவர் திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு, கொளத்துார் ஆரம்ப சுகாதார நிலையத்தில், அக்கட்சியின் மாணவர் முற்போக்கு பேரவை மாவட்ட பொறுப்பாளர் லெனின்ஜீவா தலைமையில் ரத்த தான முகாம் நேற்று காலை நடந்தது.
மாவட்ட செயலர் மெய்யழகன் தொடங்கிவைத்தார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என, 25க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். சட்டசபை தொகுதி செயலர் சிவகுமார், துணை செயலர் தமிழப்பன், மேட்டூர் நகராட்சி கவுன்சிலர் மாரியம்மாள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

