ADDED : ஜூலை 30, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், வி.சி., சார்பில், ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. சேலம் வடக்கு மாவட்ட செயலர் தெய்வானை தலைமை வகித்தார்.
அதில் துாத்துக்குடி வாலிபர் கவினை ஆணவ கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல்; ஆணவ கொலை நடக்காமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோஷம் எழுப்பினர். ஏராளமானோர் பங்கேற்றனர்.