/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாலிபால் போட்டி வீரபாண்டி பள்ளி வெற்றி
/
வாலிபால் போட்டி வீரபாண்டி பள்ளி வெற்றி
ADDED : ஜூலை 11, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், பாரதியார் தின விளையாட்டு போட்டியை, பனமரத்துப்பட்டி குறுமைய அளவில், குள்ளப்பநாயக்கனுார் அரசு பள்ளி நடத்துகிறது. அதில், வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 14 வயதுக்குட்பட்ட ஆண்கள் வாலிபால் போட்டி நேற்று நடந்தது.
தாசநாயக்கன்பட்டி, பனமரத்துப்பட்டி, முருங்கப்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி, குள்ளப்பநாயக்கனுார், வீரபாண்டி என, 6 அரசு மேல்நிலைப்பள்ளி அணிகள் மோதின. அதில் வீரபாண்டி முதலிடம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி 2ம் இடம் பிடித்தது. வெற்றி பெற்ற மாணவர்களை, ஆசிரியர்கள் பாராட்டினர்.

