ADDED : அக் 21, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி சந்தைபேட்டையில் நேற்று வாரச்சந்தை கூடியது. காய்கறி, பழங்கள், ஆடு, கோழி, விவசாய உபகரணங்கள் வாங்க, 3,000க்கும் மேற்பட்டோர் கூடுவர். தீபாவளி நாளான நேற்று, குறைந்த அளவிலேயே வியாபாரிகள் கடை வைத்தனர்.
மக்கள் வீட்டில் இருந்தபடியே தீபாவளி கொண்டாடியதால், காய்கறி, பழங்கள், தானியம் உள்ளிட்டவை வாங்க சந்தைக்கு வரவில்லை. வாரச்சந்தையில் மக்கள் கூட்டம் இல்லாததால், விற்பனை குறைந்தது. விற்பனைக்கு கொண்டு வந்த பொருட்களை வியாபாரிகள் திரும்ப எடுத்து சென்றனர்.