/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காதுகளை அறுத்து மூதாட்டி கொலை முக்கால் சவரன் நகைக்காக கொடூரம்
/
காதுகளை அறுத்து மூதாட்டி கொலை முக்கால் சவரன் நகைக்காக கொடூரம்
காதுகளை அறுத்து மூதாட்டி கொலை முக்கால் சவரன் நகைக்காக கொடூரம்
காதுகளை அறுத்து மூதாட்டி கொலை முக்கால் சவரன் நகைக்காக கொடூரம்
ADDED : அக் 20, 2025 12:53 AM
சேலம்: முக்கால் சவரன் நகைக்காக, 85 வயது மூதாட்டி தலையில் அடித்து, காதை அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம், வேம்படிதாளம், இந்திரா நகர் ரயில்வே குடியிருப்பைச் சேர்ந்த தங்கவேல் மனைவி மாரியம்மாள், 85. ரயில்வேயில் 'கீமேன்' ஆக பணிபுரிந்த தங்கவேல், 40 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
இவர்களின் மகன் தனபால், 56, என்பவருக்கு வாரிசு அடிப்படையில், கீமேன் வேலை கிடைத்தது. இதனால் அதே குடியிருப்பில், தனபாலுடன் மாரியம்மாள் வசித்தார்.
நேற்று முன்தினம், வீட்டின் வெளியே மாரியம்மாள் துாங்கி கொண்டிருந்தார். இரவு பணிக்கு, தனபால் சென்று விட்டார்.
காலை வீட்டுக்கு வந்தபோது, மாரியம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்தார். காதுகளை அறுத்து தோடு மற்றும் மூக்குத்தி மாயமாகி இருந்தது. இவை இரண்டும் முக்கால் சவரன் இருக்கும் என, கூறப்படுகிறது.
அதிர்ச்சியடைந்த தனபால், கொண்டலாம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
உடலை கைப்பற்றி விசாரித்த போலீசார் கூறுகையில், 'ரயில்வே குடியிருப்பு பகுதியில் ஒதுக்குப்புறமாக வீடு இருந்ததை சாதகமாக்கி, உருட்டுக்கட்டையால் அடித்து கொன்றுள்ளனர்.
'தோடை கழற்ற முடியாததால், காதுகளை அறுத்துள்ளனர். சம்பவத்தில் இருவர் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம்' என்றனர்.