ADDED : அக் 08, 2025 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி பகுதிகளில் உள்ள, 80 தனியார் பள்ளிகளில், 675 வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் உள்ளன. அதன் பாதுகாப்பு குறித்து, அவ்வப்போது ஆய்வு செய்கின்றனர்.
அதன்படி நேற்று, ஆத்துார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், சேலம் பறக்கும்படை ஆர்.டி.ஓ.,(வட்டார போக்குவரத்து அலுவலர்) குமரா தலைமையில் அலுவலர்கள், 23 வாகனங்களை ஆய்வு செய்தனர். வேகக்கட்டுப்பாடு கருவி, ஜி.பி.எஸ்., அவசரகால கதவு, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவிகள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள், ேஹண்ட் பிரேக், ரிவர்ஸ் கேமரா ஆகியவற்றை பார்வையிட்டனர். மாணவர்களை அழைத்துச்செல்லும்போது, பாதுகாப்பான முறையில் வாகனங்களை இயக்க, டிரைவர்களுக்கும் அறிவுறுத்தினர்.