UPDATED : அக் 25, 2026 06:30 AM
ADDED : அக் 25, 2026 05:53 AM
அ நிறம் | அளவு
தலைவாசல்:தலைவாசல், ஆறகளூர் வழியே வசிஷ்ட நதி செல்கிறது. அந்த நதியின் மயான பகுதியொட்டி சிலர் அனுமதியின்றி கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள்கேட்டபோது, மிரட்டல் விடுத்துள்ளனர். மக்கள், தலைவாசல் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்து போலீசார் விசாரித்தபோது, அனுமதியின்றி கிணறு தோண்டியது தெரிந்தது. இதனால் பொக்லைன் இயந்திரம், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர். பின் பொதுப்பணித்துறையினருக்கு தகவல் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார்
தெரிவித்தனர்.
