/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வெங்கட்ரமணர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
/
வெங்கட்ரமணர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
ADDED : அக் 20, 2024 01:17 AM
வெங்கட்ரமணர் கோவில்
தேரோட்டம் கோலாகலம்
ஓமலுார், அக். 20-
புரட்டாசி, 5வது சனிக்கிழமையில், காடையாம்பட்டி தாலுகா காருவள்ளியில் உள்ள வெங்கட்ரமணர் கோவிலில் தேரோட்டம் நடக்கும். நடப்பாண்டு புரட்டாசியில், 4 சனிக்கிழமை மட்டும் என்ற நிலையில், அதன், 5வது சனி ஐப்பசியில் வந்த நிலையில் நேற்று தேரோட்டம் நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், தேர் நிலையிலிருந்து ராஜ கோபுரம் வரை தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் சபர்மதி, கோவில் செயல் அலுவலர் சரண்யா பங்கேற்றனர்.
மதியம், 3:30 மணிக்கு ராஜகோபுரத்தில் இருந்து கோவிலை சுற்றி தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். அதற்கு முன் பெண்கள் கோலாட்டம் ஆடினர். ஓமலுார் எம்.எல்.ஏ., மணி உள்ளிட்டோரும் தரிசனம் செய்தனர். தீவட்டிப்பட்டி போலீசார், காடையாம்பட்டி தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.