/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விடிய விடிய மண் கடத்தல் வலைதளங்களில் பரவும் 'வீடியோ'
/
விடிய விடிய மண் கடத்தல் வலைதளங்களில் பரவும் 'வீடியோ'
விடிய விடிய மண் கடத்தல் வலைதளங்களில் பரவும் 'வீடியோ'
விடிய விடிய மண் கடத்தல் வலைதளங்களில் பரவும் 'வீடியோ'
ADDED : செப் 03, 2025 02:37 AM
காரிப்பட்டி, அயோத்தியாப்பட்டணம், மாசிநாயக்கன்பட்டி, சுக்கம்பட்டி, அனுப்பூர், மேட்டுப்பட்டி, பெரிய
கவுண்டாபுரம், சின்னகவுண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக இரவு முதல், விடிய விடிய மண் கடத்தல் நடக்கிறது. இதுகுறித்து புகார் அளித்தும், வருவாய்த்துறை, போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை.
சில நாட்களாக சின்னகவுண்டாபுரம் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம், இரவில் மண் கடத்தப்படுவதாகவும், அதற்கு நெடுஞ்சாலை ஓரங்களில் லாரிகள் அணிவகுத்து நிற்பதாகவும், சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது.
இதுகுறித்து வருவாய்த்துறையினர், காரிப்பட்டி போலீசார் விசாரிக்க, மக்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து, வாழப்பாடி தாசில்தார் ஜெயந்தி கூறுகையில், ''சிலர் புகார் தெரிவிக்கின்றனர். அப்பகுதிக்கு செல்வதற்குள், புகார் தெரிவிப்பவர்களே பணம் பெற்றுக் கொண்டு அந்த வாகனத்தை அனுப்பி விடுகின்றனர். இருப்பினும் மண் கடத்தல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் கூறுகையில், 'விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.