/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கிராம உதவியாளர் லஞ்சம் வாங்கிய வீடியோ 'வைரல்'
/
கிராம உதவியாளர் லஞ்சம் வாங்கிய வீடியோ 'வைரல்'
ADDED : மார் 20, 2024 02:19 AM
ஏற்காடு:ஏற்காட்டில்
இருந்து, 25 கி.மீ.,ல் உள்ள மாரமங்கலம் ஊராட்சியில் கோவிலுார்,
கூத்துமுத்தல் மலைக்கிராமங்கள் உள்ளன. அதன் முறையே கிராம
உதவியாளராக ஜான் விக்டர், ஆரோக்கியதாஸ் பணிபுரிகின்றனர்.
இருவரும் சேர்ந்து மலை கிராம மக்களிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ பரவி
வருகிறது.
அந்த வீடியோவில் ஜான்விக்டர், ஒரு
மலைக்கிராமவாசியிடம், பட்டா மாறுதலுக்கு, 1,500 ரூபாய் லஞ்சம்
வாங்குவதும், அதில் பணம் குறைவாக உள்ளது என கூறி அதிகமாக
கேட்கிறார். கிராமவாசி இல்லை என்றதும், அவரை அடிக்க ஜான் விக்டர் கையை
நீட்டுகிறார். பின் கிராமவாசி, மீதி பணத்தை பிறகு தருகிறேன் என
கூறியதும் ஜான் விக்டர், ஆரோக்கியதாஸை அழைத்து, அந்த லஞ்ச பணத்தை
கொடுக்கிறார். அவர் எண்ணிப்பார்த்துவிட்டு மேலும், 100 ரூபாய்
கேட்கிறார். இந்த வீடியோ, ஏற்காடு முழுதும் சமூக வலைதளங்களில் பரவி
வருகிறது.

