/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
26ல் கிராம சபை கூட்டம் மக்கள் பங்கேற்க அழைப்பு
/
26ல் கிராம சபை கூட்டம் மக்கள் பங்கேற்க அழைப்பு
ADDED : ஜன 20, 2024 07:49 AM
சேலம் : சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் வரும், 26ல் குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது.
இதில் ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன. மேலும் ஊரக விளையாட்டு மைதானம், சீமை கருவேல மரங்களை அகற்றுதல், நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுதல், ஊராட்சியின் சிறப்பு பிரச்னை அல்லது தேவைகள், போதைப்பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி, அரசின் பிற முக்கிய திட்டங்கள் குறித்த விபரங்கள், மக்கள் இடையே விவாதிக்கப்பட உள்ளன. இதில் மக்கள் அனைவரும் பங்கேற்க, கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.