/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
15 ஆண்டுக்கு முன் பூட்டிய கோவில் திறந்து விட ஊர் மக்கள் கோரிக்கை
/
15 ஆண்டுக்கு முன் பூட்டிய கோவில் திறந்து விட ஊர் மக்கள் கோரிக்கை
15 ஆண்டுக்கு முன் பூட்டிய கோவில் திறந்து விட ஊர் மக்கள் கோரிக்கை
15 ஆண்டுக்கு முன் பூட்டிய கோவில் திறந்து விட ஊர் மக்கள் கோரிக்கை
ADDED : ஜூன் 20, 2025 01:54 AM
சேலம், ஓமலுார் அருகே தேக்கம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம், பெரியசாமி, பழனியாண்டி, உள்ளிட்டோருடன் ஊர் மக்கள், நேற்று, சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த மனு:
தேக்கம்பட்டி மாரியம்மன் கோவில், 15 ஆண்டுக்கு முன் திருவிழா நேரத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால், தாசில்தார் முன்னிலையில் பூட்டப்பட்டது. பூஜை நடக்காமல் உள்ளதால், ஊரில் பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன. கோவிலை திறந்து திருவிழா நடத்த மக்கள் முடிவு செய்துள்ளனர்.
தாசில்தாரை சந்தித்து கோவிலை திறக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டோம். அவர், போலீஸ் அதிகாரியை சந்தித்து, 'சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த மாட்டோம்' என மனு அளிக்க கூறினார். அதன்படி மனு வழங்குகிறோம். அதிகாரிகள் பரிந்துரை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.